This Article is From Dec 11, 2018

வென்றது மஞ்சள் புரட்சி - பணிந்தார் ஃப்ரான்ஸ் அதிபர்

8000 காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்க அனுப்பப்பட்டுள்ளனர். முக்கியமான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஈஃபிள் டவ்ர் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அரசு மற்றும் முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வென்றது மஞ்சள் புரட்சி - பணிந்தார் ஃப்ரான்ஸ் அதிபர்

ஃப்ரான்ஸில் மக்கள் புரட்சியாக வெடித்துள்ளது மஞ்சள் புரட்சி. வரி உயர்வு, எரிபொருள் விலையேற்றம், அதிபர் கார்ப்பரேட்டுகளுக்கான அதிபர் என்று பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைவரும் மஞ்சள் சட்டை அணிந்து போராடினர். இதனையடுத்து ஃப்ரான்ஸ் அதிபர் மார்க்கான் குறைந்த விலையேற்றத்தையும், பென்ஷன் மீதான புதிய வரிகளை ரத்து செய்வதாகவும் அறிவித்தார்.

தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ''மக்கள் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டம் ஏற்கக்கூடியது எல்ல. மேலும் அதில் எங்களால் முடிந்த விஷயங்களை நாங்கள் மக்களுக்காக செய்து கொண்டுதான் இருந்தோம். வன்முறையை அதிகரித்து வாகனங்களை கொளுத்துவது எல்லாம் தவறான செயல்'' என்று விமர்சித்தார்.

"காவல்துறை அதிகாரிகளையும், பொதுமக்களையும், பொது இடங்களையும் தாக்குவது சரியான விஷயமல்ல. எப்போது வன்முறை வெடிக்கிறதோ அப்போதே சுதந்திரத்தை இழந்துவிட்டோம் என்று அர்த்தம்" என்றார் மார்க்கன்.

"போராட்டக்காரர்களால் நிறைய இடங்கள் தாக்கப்பட்டுள்ளன. நிறைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன" என அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் வரிகளை அதிகப்படுத்தியதால் போராட்டம் வெடித்தது. நவம்பர் 17ம் தேதி முதல் போராட்டங்கள் துவங்கி நடைபெற்று வருகின்றன. 1.36 லட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாரிஸில் 10,000 பேர் மஞ்சள் உடை அணிந்து போராடினர். அரசுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை உருவாகியுள்ளதாக 2000க்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடி கோஷமிட்டனர்.

ஃப்ரான்ஸ் அதிபர் சமூக சீர்திருத்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்ய நினைத்தோம் ஆனால் மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டார்கள்.

8000 காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்க அனுப்பப்பட்டுள்ளனர். முக்கியமான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஈஃபிள் டவ்ர் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அரசு மற்றும் முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

.