காசெம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.
New Delhi: வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு பயணிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அனைத்து விமான இயக்குநர்களுக்கும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
“மத்திய கிழக்கில் வரவிருக்கும் பதற்றத்தை கருத்தில் கொண்டு அனைத்து விமான ஆப்ரேட்டர்களும் பயணிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் விமானங்களை மீண்டும் வழிநடத்துவது உள்ளிட்ட தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
ஈரானி புரட்சிகர காவலர்களின் தலைவரான காசெம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் கொன்றது.
அவரது மரணம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.