தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்தான் முடிவு செய்வார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பேட்டி ஒன்றில், தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படத்தியது.
இந்த நிலையில், அத்வாலேவின் கருத்து குறித்து தமிழக பாஜக பொறுப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து அவர் சில விவரங்களை வெளியிட்டுள்ளார். மதுரையில் முரளிதர் ராவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ராம்தாஸ் அத்வாலே மிகச்சிறந்த தலித் தலைவர். மகாராஷ்டிராவை சேர்ந்த அத்வாலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும்தான் வெளியிடுவார்கள்.
இவ்வாறு முரளிதர் ராவ் கூறியுள்ளார்.