This Article is From Mar 13, 2020

'டெல்லியில் கலவரம் 36 மணிநேரம் நீடித்தது! அமைதியைக் கொண்டுவந்த காவல்துறைக்கு நன்றி' : அமித் ஷா

டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார்.

'டெல்லியில் கலவரம் 36 மணிநேரம் நீடித்தது! அமைதியைக் கொண்டுவந்த காவல்துறைக்கு நன்றி' : அமித் ஷா

மக்களவையில் உரையாற்றும் அமித் ஷா.

ஹைலைட்ஸ்

  • டெல்லி கலவரம் குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் விளக்கம்
  • கலவரத்தை கட்டுப்படுத்திய போலீசாருக்கு நன்றி தெரிவித்தார் அமித் ஷா
  • டெல்லி கலவரம் அரசியலாக்க முயற்சிக்கப்பட்டது என்று அமித் ஷா குற்றச்சாட்டு
New Delhi:

டெல்லியில் கலவரம் 36 மணி நேரம் நீடித்ததாகவும், அங்கு அமைதியை ஏற்படுத்திய காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார். 

டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார்.
 
மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது- 

டெல்லியில் 4 சதவீத நிலப்பரப்பில் வன்முறை வெடித்தது. 13 சதவீத மக்களை இந்த வன்முறை பாதித்தது. மொத்தம் 36 மணி நேரம் கலவரம் நீடித்தது. போலீசார் உதவியுடன் இதனை தனிப்பட்ட முறையில் நான் கண்காணித்தேன்.

முதலில் பிப்ரவரி 24-ம்தேதி மதியம் 2 மணிக்கு வன்முறை தொடங்கியது. பிப்ரவரி 25 இரவு 11 மணிக்கு முடிவுக்கு வந்தது. 

பிப்ரவரி 25-ம்தேதிக்கு பின்னர் வன்முறை நடந்ததாக எந்த தகவலும் இல்லை. இதனை அரசியலாக்க முயற்சிகள் நடந்தன. 

இவ்வாறு அமித் ஷா பேசினார். 

.