டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
New Delhi: புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் டெல்லியில் நடந்த வன்முறைக்கு எதிர்கட்சிகளை குற்றம் சாட்டி வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்நிலையில் “டெல்லியின் துக்டா -துக்டா (சிறு சிறு) கும்பலுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் காங்கிரஸை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது யாரும் (எதிர்க்கட்சிகள்) எதுவும் கூறவில்லை. அவர்கள் (பாராளுமன்றத்திற்கு வெளியே) வெளியே வந்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்”என்று டெல்லியில் நடந்த நிகழ்வில் அமித் ஷா கூறினார்.
“எதிர்க்கட்சிகள் டெல்லியில் வன்முறையை தூண்டியதுடன் குடியுரிமை திருத்த சட்டத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்தியது. டெல்லியின் துக்டா-துக்டா கும்பலுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி மக்கள் தகுந்தவகையில் தண்டனை வழங்க வேண்டும்” என்று டெல்லியின் நடந்த நிகழ்வில் அமித் ஷா உரையாற்றியபோது கூறியுள்ளார்.
வலதுசாரி கட்சிகள் தங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சி மற்றும் அதற்கு ஆதாரவானவர்களை குறிப்பிட ‘துக்டா துக்டா'என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம்.