'மொத்த நாட்டுக்கு ஒரே மொழி இருக்க வேண்டியது அவசியம்.'
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah), இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி (Hindi) இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷா, “இந்தி நாளான இன்று, நமது நாட்டின் அனைத்து குடிமக்களும் நமது தாய் மொழியை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். காந்தி, இறும்பு மனிதர் சர்தார் படேலின் கனவுகளான ஒரு நாடு, ஒரு மொழி கனவுக்கு இந்தியைப் பயன்படுத்தவோம்.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் மொத்த நாட்டுக்கு ஒரே மொழி இருக்க வேண்டியது அவசியம். அதுவே உலகில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டும். ஒரு மொழி, மொத்த நாட்டையும் ஒற்றுமையாக வைக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.