Citizenship (Amendment) Bill:
New Delhi: உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மாநிலங்களவையில் குடியுரிமை (திருத்த) மசோதாவை தொகுத்து பேசினார். நாட்டில் முஸ்லிம்கள் குடிமக்களாக இருப்பார்கள் என்றும் பயப்படத்தேவையில்லை என்றும் கூறினார்.
“இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்று தவறான தகவல்களை பரப்ப முயற்சிகள் நடந்து வருகின்றன, அவ்வாறு இல்லை. இந்த மசோதா அண்டை நாடுகளின் சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டுமே. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
“இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். தயவு செய்து தவறான தகவல்களை கேட்டுக் கொள்ளாதீர்கள் என்று இந்திய முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து தவறாக வழிநடத்தப்பட வேண்டாம். தயவு செய்து பயத்தில் வாழ வேண்டாம். அச்சமின்றி வாழுங்கள்” என்றார்.
குடியுரிமை (திருத்த) மசோதா, 2015க்கு முன்னர் நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து முஸ்லீம் அல்லாதவர்கள் இந்திய குடிமக்களாக மாறுவதை எளிதாக்க முயல்கிறது. திங்களன்று ஏழு மணிநேர விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா மக்களவையில் 334 ஆதரவான ஓட்டுகளையும் 106 எதிரான வாக்குகளையும் பெற்றது.