This Article is From Jun 28, 2019

அரசு அதிகாரிகளை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ - விளக்க அறிக்கை கேட்ட அமித் ஷா

அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, ஆகாஷ் கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்து விரட்டினார். இந்த சம்பவம் வீடியோ காட்சியாக சமூகவலை தளத்தில் வைரலானது. அதிகாரிகள் எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்கியா மீது வழக்கு தொடுத்தனர்.

அரசு அதிகாரிகளை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ - விளக்க அறிக்கை கேட்ட அமித் ஷா

ஜாமீன் மனு மறுத்ததையடுத்து ஆகாஷ் விஜயவர்ஷியா ஜூலை 7 ஆம் தேதிவரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்

ஹைலைட்ஸ்

  • வாக்குவாதத்தை தொடர்ந்து, ஆகாஷ் கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்தார்.
  • அதிகாரிகள் இவர் மீது வழக்கு தொடுத்தனர்.
  • ஜூலை 7 வரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்
New Delhi:

மத்திய பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் குறித்த விளக்க அறிக்கையினை  உள்துறை அமைச்சரும் பாஜகவின் தலைவருமான அமித் ஷா கேட்டுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் -3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு பிரச்னை எழுந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக உள்ளாட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய் வர்கியாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'அப்போது 5 நிமிடத்தில் அதிகாரிகள் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு'' என்று எச்சரித்தார். 

அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, ஆகாஷ் கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்து விரட்டினார். இந்த சம்பவம் வீடியோ காட்சியாக சமூகவலை தளத்தில் வைரலானது. அதிகாரிகள் எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்கியா மீது வழக்கு தொடுத்தனர். 

குடிமை அதிகாரியைத் தாக்கியதற்காக ஜாமீன் மனு மறுத்ததையடுத்து ஆகாஷ் விஜயவர்ஷியா ஜூலை 7 ஆம் தேதிவரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  

இந்த சம்பவத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது “பாஜகவில் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது, முதல் கோரிக்கை வையுங்கள் அதன்பின் தாக்குங்கள் என்பது தான். நான் ஒரு மக்கள் பிரதிநிதி. மக்கள் பிரச்னைகளை அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைப்பதுதான் எனது வேலை. இதை சுமுகமாக முடிக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அதிகாரிகள் தாதாக்களை போல செயல்பட்டனர். மக்களின் கருத்துக்களை கேட்க விரும்பவில்லை. இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.” என்று கூறியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்கள் அறிக்கை குறித்து தீர விசாரித்தபின்னர் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறுகின்றனர்.

.