This Article is From Dec 03, 2019

2024-ம் ஆண்டுக்குள் தேசிய மக்கள் பதிவேடு நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் :அமித் ஷா உறுதி

Jharkhand Assembly Election 2019: சட்ட விரோதமாக குடியேறியவர்களை வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள். ஆனால், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நிச்சயம் 2024 தேர்தலுக்கு முன் வெளியேற்றப்படுவார்கள் இது நிச்சயம் என்று தெரிவித்தார்.

2024-ம் ஆண்டுக்குள் தேசிய மக்கள் பதிவேடு நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் :அமித் ஷா உறுதி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது -அமித் ஷா

Baharagora, Jharkhand:

2024 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தேசிய மக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்து விடும். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 

ஜார்கண்ட் சட்டபேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறதுபெறுகிறது. இதனால் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில்  கலந்து கொண்டு அமித் ஷா பேசினார். சக்ரதார்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஜம்மு -காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைந்துள்ளது.” என்று பாஜகவின் சாதனைகளாக கூறினார்.  

மேலும் பேசியவர், “ராகுல் காந்தி  குடியேறியவர்களை விரட்ட கூடாது  என்றும் அவர்கள் எங்கு போவார்கள்..? என்ன சாப்பிடுவார்கள்? என்று கேட்கிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள். ஆனால்,  சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நிச்சயம் 2024 தேர்தலுக்கு முன் வெளியேற்றப்படுவார்கள் இது நிச்சயம் என்று தெரிவித்தார். ஜார்கண்டில் மாவோயிஸ்ட்களை ஒடுக்கி வளர்ச்சிக்கு வழி வகை செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்தார். 

.