বাংলায় পড়ুন Read in English
This Article is From May 29, 2020

ஊரடங்கு நீட்டிப்பு? அனைத்து மாநில முதல்வர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை!

மற்ற நேரங்களில் அமைச்சரவை செயலாளரே இந்த பணிகளை செய்து வந்த நிலையில், அமித் ஷாவே நேரடியாக தொடர்பு கொள்வது அரசியல் நடவடிக்கையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • அனைத்து மாநில முதல்வர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை!
  • மாநிலங்களின் முடிவு என்ன என்பது குறித்து அவர் கேட்டறிந்துள்ளார்.
  • ஊரடங்கு காலத்தையும் மறுஆய்வு செய்வதில் பிரதமர் அலுவலகம் மும்முரமாக உள்ளது
New Delhi:

அனைத்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்தை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 31ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பாக மாநிலங்களின் முடிவு என்ன என்பது குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, அனைத்து மாநில முதல்வர்களும் எந்த வகையில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, முழு ஊரடங்கு காலத்தையும் மறுஆய்வு செய்து, ஜூன்.1ம் தேதி முதல் முன்னோக்கி செல்ல வேண்டிய வழிகளை தீர்மானிப்பதில் பிரதமர் அலுவலகம் மும்முரமாக உள்ளது. 

மற்ற நேரங்களில் அமைச்சரவை செயலாளரே இந்த பணிகளை செய்து வந்த நிலையில், அமித் ஷாவே நேரடியாக முதல்வர்களை தொடர்பு கொள்வது அரசியல் நடவடிக்கையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளும், மாநில முதலமைச்சர்களும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபட்டுத்த எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிப்பது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது, இதனால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

ஊரடங்கு தொடர்பான முன்னோக்கி செல்வது குறித்து கேட்டறிவது என்பது "ஒரு அரசியல் அழைப்பாக இருக்கும்" என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. 

அரசின் முயற்சிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் தொடர்ச்சியும் அடங்கும், அது மாநிலத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும், சுகாதாரம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அல்லது மாநிலங்கள் எவ்வாறு தொடர விரும்புகின்றன என்பதற்கான இறுதி முடிவை மட்டும் தெரிந்து கொள்ள அது அனுமதிக்கும்.

Advertisement

கடைசியாக மே மாதத்திற்கு இடையே ஊடரங்கை நீட்டித்தபோது, மத்திய அரசு விரிவான தளர்வுகளுக்கு அனுமதி அளித்தது, கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பது தொடர்பான மாநில அரசின் முடிவுகளை ஏற்கவில்லை.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து முதல்வர்களுக்கும் இடையே ஒரு நாள் சந்திப்பு நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன்பு, பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் பேசி அவர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

Advertisement