182 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை உருவாகி உள்ளது
New Delhi: சுதந்தர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் படி, பட்டேலின் 143 வது பிறந்ததினமான அக்டோபர் 31-ம் தேதி 182 அடி உயரமுடைய சிலையை நர்மதா நதிக்கரையில் நிறுவி, திறந்து வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
3000 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இச்சிலையின் பின்பக்கத்தில் “மேட் இன் சைனா” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சுட்டிக் காட்டியுள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள அமித்ஷா, “சிலை குறித்த ராகுல் காந்தியின் பேச்சு மறைந்த சர்தார் வல்லபாய் படேலை அவமதிப்பதாக உள்ளது. 'ஒற்றுமைக்கான சிலை' விவகாரத்தில் சர்தார் படேலுக்கு எதிராக நீங்கள் கொண்டுள்ள வன்மம் வெளிவந்துள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.