हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From Jul 23, 2018

தனியாக போரிட தயாராகுங்கள் : சிவ சேனாவுடனான பிளவு குறித்து பி.ஜே.பி தொண்டர்களிடம் பேசிய அமித் ஷா

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பு பிரதிநிதிகள் யார் என்கிற பெயர் பட்டியலை பா.ஜ.க விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement
இந்தியா
Mumbai:

மக்களவைத் தேர்தல் 2019: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பு பிரதிநிதிகள் யார் என்கிற பெயர் பட்டியலை பா.ஜ.க விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனா கட்சியுடன் ஏற்பட்ட பிளவால், 2019ஆம் ஆண்டின் லோக் சபா தேர்தலை தனியாக சந்தித்து வெற்றி பெற உழைக்க வேண்டுமென பா.ஜ.க கட்சி தொண்டர்களிடம் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா கட்சியும் பா.ஜ.க.வும் தனித்தனியாக போட்டியிட இருப்பதால், தேர்தலில் மும்முனைப் போட்டியையோ அல்லது நான்கு முனை போட்டியையோ எதிர்பார்க்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் அமித் ஷா.   

"2019 தேர்தலை தனியாக சந்தித்திட நாம் தயாராக வேண்டும்" என்றும், "ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 51% மக்களாவது பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்க செய்திடும் அளவிற்கு இப்பொழுதே நாம் வேலைகளை தொடங்கிட வேண்டும்" என்றும் அமித் ஷா பேசியதாக சொல்லப்படுகிறது.  

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பு பிரதிநிதிகள் யார் என்கிற பெயர் பட்டியலை பா.ஜ.க விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இது குறித்து, பா.ஜ.க தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. 2014ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சிவசேனா கட்சியும் பா.ஜ.க.வும், சில மாதங்களுக்கு பின் கொள்கை வேறுபாடுகளால் பிரிந்துவிட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்முறையாக பா.ஜ.க கட்சி தனிப்பெரும் கட்சியாக உயர்ந்தது. 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியும் தனியாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

2019 தேர்தலை தனியாக சந்திக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தது சிவசேனா கட்சி. கடந்த சில மாதங்களாக, சிவசேனா மற்றும் பா.ஜ.க இடையிலான விரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது. தங்களது 'சாம்னா' பத்திரிக்கையில் தினந்தோறும் பா.ஜ.க கட்சி மற்றும் பிரதமர் மோடி மீதான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது சிவசேனா. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனாவின் நிலைப்பாடும், பா.ஜ.க கட்சி மற்றும் பிரதமர் மோடியை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியதும் அதை மேலும் வலுவாக்கியது.  

Advertisement

சிவசேனா கட்சி தலைவர் உதய் தாக்கரேவிடம் தொலைபேசியில் பேசிய அமித் ஷா, தேர்தலில் அக்கட்சியின் ஆதரவை கேட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், சிவசேனாவின் முடிவோ 'மக்களை கொன்றுவிட்டு மாட்டை மட்டும் காப்பாற்றும் கசாப்புக் கடைக்காரர்கள் போலிருக்கிறார்கள் நாட்டை ஆள்பவர்கள்' என அவர்களது 'சாம்னா' பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரையை போலிருக்கிறது.  

சிவசேனாவுடன் கூட்டணி வைத்து கொள்ளலாம் என பா.ஜ.க நினைத்தாலும் சிவசேனாவின் முடிவும், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களது நிலைப்பாடும் அதற்கு சாதகமாக இல்லை என்பதையே சொல்கிறது.

Advertisement