Read in English
This Article is From May 10, 2019

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமித்ஷா தான் உள்துறை அமைச்சர்: அரவிந்த் கெஜ்ரிவால்

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ-யால் குற்றம்சாட்டப்பட்ட அமித்ஷா 2010ல் ராஜினாமா செய்தார்.

Advertisement
இந்தியா Edited by

மக்களவை தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.

New Delhi:

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், 6 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 2 கட்டம் மட்டுமே மீதுமுள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமித்ஷா தான் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

வாக்கெடுப்பு கண்காணிப்பு நிறுவனம் ஒன்றின் டிவிட்டர் பதிவை டேக் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்தித்து வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். மோடி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினால், பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார். அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றால் நாட்டின் நிலையை நினைத்து பாருங்கள். அதனால், இதனை சிந்தித்து வாக்களியுங்கள் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

விடிபிஏ அசோசியேட்ஸ் வாக்கெடுப்பு கண்காணிப்பு நிறுவனம், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், முன்னாள் நிதி ஆலோசகர் அரவிந்த் வீரமணி மற்றும் ஆர்பிஐ கவர்னர் பீமால் ஜெயின் ஆகியோர் நிதியமைச்சர் பொறுப்பேற்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்த நேரத்தில், அம்மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்தார். இதனிடையே 2010ஆம் ஆண்டில் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ-யால் அமித்ஷா குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அமித்ஷா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 3 மாதம் சிறையில் இருந்த அவர் பின்னர் பிணையில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து, 2016ஆம் ஆண்டில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித்ஷா உட்பட 16 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

Advertisement

கடந்த மாதம், அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மோடி மற்றும் அமித்ஷாவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என்று கூறியிருந்தார். 

எனினும், காங்கிரஸூடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதேபோல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

Advertisement

டெல்லியில், வரும் 12ஆம் தேதி 6வது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 7கட்டங்களாக நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

Advertisement