ஜம்மு-காஷ்மீரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.
New Delhi: ஜம்மு-காஷ்மீரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை உள்துறை அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற நிலையில், அக்கட்சியின் தலைவரான அமித் ஷா உள்துறை அமைச்சராக முதல்முறையாக மசோதாவை தாக்கல் செய்கிறார்.
இந்த மசோதா ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திருத்தப்பட்ட மசோதாவை தாக்கல் செய்து அதன் முக்கியத்துவம் குறித்து அவையில் அமித் ஷா பேச உள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மசோதாவுக்கு முந்தைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, தொழிற்கல்வி படிப்புகளுக்கான அட்மிஷன் ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா-2019 கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.