This Article is From Jun 22, 2020

கொரோனாவால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பையும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்: அமித் ஷா

கொரோனா வைரஸின் விரைவான பரவலை சரிபார்க்க அனைத்து கட்டுப்பாட்டு மண்டலங்களையும் மீண்டும் சரிபார்க்கவும் பரிந்துரைத்தது

கொரோனாவால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பையும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்: அமித் ஷா

ஹைலைட்ஸ்

  • The meetings follow top court's rebuke of Delhi over handling of pandemic
  • Amit Shah has formulated a unified NCR plan to fight COVID-19
  • Delhi's coronavirus cases might touch 1 lakh by the end of this month
New Delhi:

கொரோனா வைரஸ் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் அனில் பைஜல் ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார், அப்போது, மேலும் வலுவாக தொடர்பை தடமறிதல், கட்டுப்பாட்டு மண்டல மூலோபாயத்தை முழுமையாக புதுப்பித்தல், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கொரோனாவால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பையும் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று டெல்லி அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைத்த உயர்மட்டக் குழுவில், அனைத்து கொரோனா நோயாளிகளின் தொடர்புகளை அறிந்து தனிமைப்படுத்தவும், கொரோனா வைரஸின் விரைவான பரவலை சரிபார்க்க அனைத்து கட்டுப்பாட்டு மண்டலங்களையும் மீண்டும் சரிபார்க்கவும் பரிந்துரைத்தது. ஆரோக்யா சேது மற்றும் இதிஹாஸ் பயன்பாடுகளை தொடர்பு அறிதலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுடன் தொடர்புடைய மரணங்கள் குறித்து, அரசு கூறும்போது, "உயிரிழந்த நபர் வீட்டில் தனிமையில் இருந்தாரா, சரியான நேரத்தில் அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாரா இல்லையா என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் பராமரிப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும், வீட்டில் வசதி உள்ளவர்கள், வேறு எந்த நோயும் இல்லாதவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலந்தாலோசனையின் போது, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டார். அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த மூத்த மருத்துவர்கள், எய்ம்ஸ் ஆகியவற்றின் மூத்த மருத்துவர்களும் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் பாதிப்புக்குள்ளான பொருளாதாரம் மற்றும் வணிக நடவடிக்கைகளை சீர்படுத்தும் விதமாக மீண்டும் தொடங்கப்பட்ட அன்லாக்1 கட்டப்பாட்டு தளர்வுகளை தொடர்ந்து, மக்கள் நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டனர். இதனால், விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

.