This Article is From Mar 15, 2020

கொரோனா அச்சம்; ரசிகர்களின் சந்திப்பை ரத்து செய்த அமிதாப்

கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை சந்திப்பிற்காகத் தனது  பங்களாவில் வர வேண்டாம் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்

கொரோனா அச்சம்; ரசிகர்களின் சந்திப்பை ரத்து செய்த அமிதாப்

இந்த புகைப்படத்தை அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • Amitabh Bachchan canceled Sunday Meet at his Jalsa residence
  • "Take precautions... be safe," he tweeted
  • Amitabh Bachchan will next be seen in Gulabo Sitabo
New Delhi:

அமிதாப் பச்சன் தனது சமீபத்திய ட்வீட்டில், கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை சந்திப்பிற்காகத் தனது  பங்களாவில் வர வேண்டாம் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். நடிகரின் மும்பை இல்லத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துவது பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு சடங்கு, ஆனால் இப்போது கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதைச் சிறிது நேரம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறார் அமிதாப் பச்சன். தனது "நலம் விரும்பிகளுக்கு" அவர்களைச் சந்திக்க வரமாட்டேன் என்று தெரிவித்ததோடு, அவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொன்னார். இதை அவர் ட்வீட் செய்துள்ளார்: " அனைத்து குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து இன்று ஜல்சா வாயிலில் வர வேண்டாம் ... ஞாயிற்றுக்கிழமை சந்திப்புக்கு  நான் வரப்போவதில்லை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் ... பாதுகாப்பாக இருங்கள்." என்று தனது ட்விட்டில் தெரிவித்திருக்கிறார்.

Read Amitabh Bachchan's tweet here:

முன்னதாக, தனது பதிவு ஒன்றில், அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் குறித்த தனது கவலையைக் கவிதை வரிகளில் வெளிப்படுத்தினார். அவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் வைரஸால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு எடுக்கக்கூடிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் எழுதிய ஒரு கவிதையை அவர் குறிப்பிடுவதைக் காணலாம். அவர் கொரோனா தொற்று குறித்து தனது கவலையை தெரிவித்திருக்கிறார். அவர் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

", Carona-"

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

நாவல் கொரோனா வைரஸானது முதன்முதலில் சீனாவின் வுஹானில் ஒரு கடல் உணவு சந்தையில் கண்டறியப்பட்டது. இது உலகளவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

.