Read in English
This Article is From Oct 21, 2018

850க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்களை அடைக்கும் அமிதாப் பச்சன்!

மேலும் நடிகர் அமிதாப் பச்சன் கேபிசி கரம்வீர் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அஜித் சிங்கிற்க்கும் உதவ போவதாக செய்தி வெளியிட்டுள்ளார்

Advertisement
இந்தியா

அமிதாப் பச்சன் இதுவரை மகாராஷ்டிராவை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்களை அடைத்துள்ளார்.

Highlights

  • அமிதாப் பச்சன் இச்செய்தியை தனது வலைபக்ககுறிப்பில் பதிவுசெய்திருந்தார்.
  • பச்சன் தான் 5.5 கோடி ரூபாய் மதிப்பிளான கடன் உதவிகளை செய்ய உள்ளதாக அறிவித்
  • மகாராஷ்டிராவை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்துள்ளார்
Mumbai:

பாலிவுட் மேகாஸ்டார் அமிதாப் பச்சன் தான் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 850க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்களை அடைக்கபோவதாக கூறியுள்ளார். 76 வயது நடிகரான அமிதாப் பச்சன் இதுவரை மகாராஷ்டிராவை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்களை அடைத்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைக்குறிப்பில், நடிகராக உதவியவர்களுக்கு உதவுவது தனக்கு திருப்தி அளிப்பதாகவும்... 44 குடும்பங்கள் 112 பன்முகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களாகி மகாராஷ்டிராவுக்கு உதவியதாக பெருமிதப்பட்டுள்ளார். இது ஒரு சிறிய உதவி எனவும் இது போன்று பல உதவிகளை இனி தொடர்ந்து செய்ய போவதாக கூறினார்.

மேலும் அமிதாப் பச்சன் தனது வலை பக்க குறிப்பில், “350க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்கள் முழுதாக செலுத்த கடினமாக உள்ளதாகவும் இவ்வுதவி விவசாயிகளை தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்து மாற்றும் என நம்புகிறேன்.

Advertisement

மேலும் சில தினங்களுக்கு முன்புதான் ஆந்திரா மற்றும் வித்தர்பாவில் உள்ள விவசாயிகளின் கடன்களை தீர்த்தாகவும் இனி உத்திரபிரதேசத்தை சேர்ந்த 850க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்களை அறிந்து சுமார் 5.5 கோடி ரூபாய் செலவில் மற்றும் வங்கிகளின் உதவியோடு இச்சம்பவத்தை நடத்தபோவதாக தெரிவித்தார்.

மேலும் நடிகர் அமிதாப் பச்சன் கேபிசி கரம்வீர் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அஜித் சிங்கிற்க்கும் உதவ போவதாக தன் வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அஜித் சிங் இளம் பெண்களை கடத்துவது மற்றும் வற்புறுத்தி பாலியல் தொழியில் இடுபட செய்வது போன்ற சம்பவங்களுக்கு எதிராக செயல்படுபவர்.

Advertisement
Advertisement