This Article is From Jan 04, 2019

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுகிறார்

திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுவார் என்று கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுகிறார்

திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுவார் என்று கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளராக எஸ். காமராஜ் இருந்து வருகிறார். திமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதை தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. வரும் 28-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தஞ்சையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் 8-ம்தேதி காமராஜ் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என தினகரன் கூறியுள்ளார்.

திமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தரப்பில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, அதன் முடிவில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

.