Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 21, 2018

பஞ்சாப் ரயில் விபத்து விவகாரம்: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு!

அமிர்தசரஸ் தசரா நிகழ்ச்சிக்காக விழா ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்றுள்ளனர்

Advertisement
இந்தியா Posted by (with inputs from PTI)

அமிர்தசரஸ் கோர ரயில் விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

Amritsar:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து குற்றவாளி என சந்தேகிக்கும் நபர்கள் மீது ரயில்வே போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களே இதற்கு முழு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியின் கவுன்சிலர் விஜய்மாதவன் மற்றும் அவரது மகன் சவுராப் மதன் மிதுனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே கோபமடைந்த பொது மக்கள் சிலர் மதன் வீட்டின் ஜன்னல்களை கற்களால் தாக்கினர். இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது. இந்த ரயில் விபத்தோடு சம்பந்தப்படுவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 304, 304ஏ மற்றும் 338 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

Advertisement

மேலும், இந்த விபத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் நபர்கள் குறித்து தற்போது தகவல்கள் எதுவும் வெளியிட முடியாது. இப்போது நடைபெற்று வரும் விசாரணையைக் கொண்டு குற்றவாளிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக அமிர்தசரஸ் ஜிபிஆர் ஸ்டேஷனின் அலுவலரான பல்வீர் சிங் கூறியுள்ளார். ரயில் ஓட்டுநரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படததால் அவரை கைது செய்யவில்லை என்று அவர் கூறினார்.

அமிர்தசரஸ் தசரா நிகழ்ச்சிக்காக விழா ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்றுள்ளனர். எனினும், நகராட்சி அதிகாரிகளின் ஓப்புதல் பெறுவது குறித்து அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அமிர்தசரஸ் நகராட்சி ஆய்வாளர், சோனாலி கிரி கூறுகையில், இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை என்று கூறினார்.

Advertisement

இதேபோல் ரயில்வே அதிகாரிகளும் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து எந்த தகவல்களும் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்திற்கு ரயில்வே நிர்வாகமே காரணமென்று அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கவுர் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, ரயிலை மெதுவாக இயக்கவேண்டியது அவர்களது தலையாய கடமை என்று கூறியுள்ளார்.

Advertisement


 

Advertisement