ஒழுங்கீனத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலை. கழகம் எச்சரித்துள்ளது.
Aligarh: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி மனான் பஷிர் வானி என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இறுதியஞ்சலி நிகழ்வில் ஈடுபட்டிருந்த காஷ்மீர் மாணவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே, பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முழு விளக்கம் அளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
முன்னதாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வின்போது, பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்திற்கும், காஷ்மீர் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து பதில் அளித்துள்ள பல்கலைக் கழக நிர்வாகம், ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
27 வயதான மனான் வானி, பி.எச்.டி. படித்த மாணவர் ஆவார். அவர் கடந்த ஜனவரியில் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார். குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.