Read in English
This Article is From Dec 12, 2019

அமுல் நிறுவனத்தின் அட்டகாச விளம்பரம்…! பதில் சொல்லும் நெட்டிசன்கள்

அமுல் நிறுவனத்தின் சின்னமான சிறுமி மூன்று வெங்காயங்களை கையாளுகிறது. இதற்கு தலைப்பு “அமுல் உங்களை அழ வைக்க மாட்டார்” என்று வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

ஒரு ட்விட்டர் பயனர் “காதல் & வெங்காயம் இரண்டும் கண்ணீரை உண்டாக்குகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

New Delhi:

அமுல் நிறுவனத்தின் விளம்பரங்கள் காலத்திற்கு ஏற்றவாறு படைப்பாற்றலுடன் செய்யப்படுவை. இந்த முறை வெங்காய விலை குறித்த பிரச்சாரத்தை கொண்டு வந்துள்ளது. இது பல ட்விட்டர் பயனர்களை மகிழ்வித்தது. 

அமுல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அமுல் நிறுவனத்தின் சின்னமான சிறுமி மூன்று வெங்காயங்களை கையாளுகிறது. இதற்கு தலைப்பு “அமுல் உங்களை அழ வைக்க மாட்டார்” என்று வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவு 240க்கும் மேற்பட்ட முறை மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.7Kவுக்கும் மேற்பட்ட லைக்கினை பெற்றுள்ளது. 

ஒரு ட்விட்டர் பயனர் “காதல் & வெங்காயம் இரண்டும் கண்ணீரை உண்டாக்குகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

மற்றொரு பயனர் “நீங்கள் அழ வைக்க மாட்டீர்கள் அல்லவா…? 1கிலோ பாலுடன் வெங்காயத்தை இலவசமாக கொடுப்பீர்களா”  என்று கேட்டுள்ளார்

மற்றொருவரோ “வெங்காய சுவை கொண்ட வெண்ணெய் அறிமுகப்படுத்துவீர்களா” என்று பயனர் கேட்டுள்ளார். 

Advertisement

ஒரு பதிவர் “நீங்கள் பால் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்துங்கள். மாறாக வெங்காயத்தின் மீது அல்ல” என்று கூறியிருந்தார். 

Advertisement