বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 20, 2019

ஏ.என் 32 விமான விபத்து: 6 உடல்கள், 7 பேர் சடலம் அருணாச்சலில் மீட்பு!

விமானத்தின் காக்பிட்டில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் கறுப்புப் பெட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

உயிரிழந்தவர்களின் உடல்கள், ஜோர்ஹத்தில் இருக்கும் விமான தளத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

Highlights

  • இந்த மாதத் தொடக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டது
  • ஜூன் 11 ஆம் தேதி, விமானம் விபத்தான இடம் கண்டுபிடிக்கப்பட்டது
  • பல கட்டங்களில் விமானத்தைத் தேடும் பணி நடைபெற்றது
New Delhi:

அருணாச்சல பிரதேசத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் விபத்துக்கு உள்ளானது ஏ.என் 32 ரக இந்திய விமானப் படை விமானம். அந்த விமானத்தில் இருந்து அனைவரும் உயிரிழந்துவிட்டதாக விமானப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் பயணித்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. எம்.ஐ-17 ரக ஹெலிகாப்ட்டர் மூலம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி, ஏ.என்-32 விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் விபத்துக்கு உள்ளானபோது 13 இந்திய விமானப் படையினர் அதில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

உயிரிழந்தவர்களின் உடல்கள், ஜோர்ஹத்தில் இருக்கும் விமான தளத்திற்குக் கொண்டு செல்லப்படும். அந்தத் தளத்தில்தான் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ளனர். 

விமானத்தின் காக்பிட்டில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் கறுப்புப் பெட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதை வைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது. 
 

கடந்த ஜூன் 3 ஆம் தேதி மதியம் 1 மணி அளவில், எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேருடன், அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து அருணாச்சலின் மெச்சுகா என்ற இடத்துக்கு ஏ.என் 32 விமானம் புறப்பட்டது. ஆனால், ஒரு கட்டத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Advertisement

இதைத் தொடர்ந்து சி-130 ஜே ரக விமானம், சூகாய் சு-30 போர் விமானம், நேவி பி8-ஐ விமானம், ராணுவ ஹெலிகாப்ட்டர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டன. இவைத் தவிர இஸ்ரோ செயற்கைக்கோள்களும் ஆளில்லா ட்ரோன் விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

விமானம், தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடமானது மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இதனால் தேடுதல் பணி மிகவும் சிரமமாக இருந்துள்ளது. மேலும் வானிலையும் தேடுதலுக்கு கை கொடுக்கும் வகையில் அமையவில்லை என்று சொல்லப்படுகிறது. 

Advertisement

ரஷ்ய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம், விமானப்படை வீரர்களை கொண்டு செல்லும் பணிகளுக்கு சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் இந்திய பாதுகாப்புப் படையின் 9 விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. இதில் ஒரு ஜாகுவார் விமானம், 2 மிக்-27 விமானங்கள், 2 மிக்-21 விமானங்கள், ஒரு மிக்-17 ரக விமானம், ஒரு மிராஜ் 2000 விமானம், ஒரு சூர்யகிரண் ஹாக் எக்ஸ் 2 விமானம் மற்றும் ஒரு ஏ.என்.32 ரக விமானம் அடங்கும். 

Advertisement