ட்விட்டரில் மட்டும் இந்த அம்புக்குறி குறித்தான வீடியோவுக்கு 27 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
ஒரு 3டி அம்புக்குறி, இடது பக்கம் திரும்பவே திரும்பாமல் இருக்கும்படியான டிசைன் இணையத்தில் பலருக்குத் தலைவலியைக் கொடுத்து வருகிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படுவைரலாகி வருகிறது. பலரும் இதற்கான காரணம் என்னவென்று தேடி வருகின்றனர். இந்த குழுப்பத்துக்குக் காரணம், அந்த அம்புக்குறி ஒரு பக்கம் மட்டும்தான் திரும்புகிறது…
தி மிரர் செய்தி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்படி, அந்த 3டி வடிவ அம்புக்குறி, ஜப்பானி கணித நிபுணர் கோகிச்சி சுகிஹராவால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. ட்விட்டரில் மட்டும் இந்த அம்புக்குறி குறித்தான வீடியோவுக்கு 27 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
கீழே வீடியோவைப் பார்த்து நீங்களும் குழப்பமடையுங்கள்:
இது குறித்து ஒரு ட்விட்டர் பயனர், ‘இந்த அம்புக்குறி ஒரு பக்கம் திரும்புவதை நம்மால் பார்க்க முடியாது. காரணம், அதில் சில வளைவுகள் இருக்கின்றன. அந்த வளைவுகளை நமது மூளை பதிவு செய்து கொள்ளாது. அதனால்தான் அது இடது பக்கம் திரும்புவதைப் பார்க்கவே முடியாது' என்கிறார்.
இந்த ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு மக்கள் எப்படி ரியாக்ட் செய்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்:
Click for more
trending news