ஹைலைட்ஸ்
- மும்பையிலிருந்து லண்டன் சென்றது விமானம்
- விமானப் பணிப் பெண்ணை கடுமையாக சாடியுள்ளார் அந்தப் பயணி
- ஹீத்ரூவில் விமானம் தரையிறங்கியவுடன் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
New Delhi: அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏர் இந்தியா விமானத்தில் தனக்குக் கூடுதல் ஒயின் குடிக்கத் தராததால் விமான ஊழியர்களைக் கடும் வார்த்தைகளால் வசைபாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை ஏர் இந்தியா விமானத்தில் மும்பையிலிருந்து லண்டன் செல்ல அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் குடிப்பதற்காக கூடுதல் ஒயின் கேட்க, அப்பெண் முன்னதாகவே குடிபோதையில் இருந்ததால் விமான ஊழியர்கள் விமானியின் அனுமதியோடு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தனக்கு ஒயின் மறுக்கப்பட்டதால் கோபமடைந்த பயணி, அங்கிருந்த ஊழியர்கள் கடுமையான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.
வீடியோவில் அப்பெண், ‘நான் சர்வதேச வழக்கறிஞர். உங்களுக்காகத் தான், ரோஹிங்கியாக்களுக்கும், அகதிகளுக்கும் வாதாடி வருகிறேன். எனக்கே ஒயின் தர மாட்டீர்களா?' என கடுமையான சொற்கள் பயன்படுத்தி ஆவேசமாக கத்துவது பதிவாகியுள்ளது. விமான ஊழியர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் கேட்காத அப்பெண் விமானம் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் கைது செய்யப்பட்டுள்ளார்.