This Article is From Jul 15, 2018

வெரிஃபை செய்யாத குழந்தை கடத்தல் வழக்கினால், அதிகரித்து வரும் கும்பல் கொலைகள்

2018 ஜூன் மாத இறுதியில், 11 மாநிலங்களில் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தை கடத்தல் வதந்தி அதிகரித்துள்ளது
  • செய்தித்தாள்களில், சரிபார்க்கப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன
  • போலி செய்திகளால், 11 மாநிலங்களில், 30க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்
Chakuliya, Jharkhand:

ஜார்கண்ட்: கடந்த மே மாதம், குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக ஜம்செத்பூர் நகரை சேர்ந்த ஏழு நபர்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப், சமூக வளைத்தளங்களில் வெளியாகும் போலி செய்திகளை நம்பி, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று கருதி பலர் கொல்லப்படுகின்றனர்.

2018 ஜூன் மாத இறுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற கொலை சம்பவங்களில், 11 மாநிலங்களில் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

கடந்த மே மாதம், ஜம்ஷெத்பூர் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சகுலியா கிராமத்தில், 13 வயது சுபாய் என்ற சிறுவனை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கடத்த முயன்றதாக செய்திகள் வெளியாகின.

பிரபாத் காபர், ஹிந்துஸ்தான் ஆகிய இரண்டு முக்கிய செய்தித்தாள்களில் வெளியான இந்த செய்தி, காவல் துறையினரின் மேற்கோள் இல்லாமல் வெளியாகி இருந்தது. இதனால், செய்தியின் உண்மை தன்மையில் சந்தேகம் அளிப்பதாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் பதிவேற்றங்கள் இல்லை. இது போன்ற சம்பவம் நடைப்பெறவில்லை என்று காவல் துறையினர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சரிபார்க்கப்படாத செய்திகளினால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடத்தல் கும்பல் என்று கருதி பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வாட்ஸ் ஆப்பில் வரும் போலி செய்திகளை நம்பி, பலரும் கொல்லப்படுகின்றனர்.

ஜம்செத்பூர் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய வழக்கில், மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் சங்கர் குப்தா, சுஷில் அகர்வால் ஆகிய இருவரும், ஜம்ஷெத்பூர் ஜடுகோடா கிராமத்தை சேர்ந்த சவுரப் குமார் என்றவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

cidhpg18

தாக்குதல் நடைப்பெற்ற ஏழு தினங்களுக்கு முன்பு, மே மாதம் 11 ஆம் தேதி, வாட்ஸ் அப், பேஸ்புக்கில் குழந்தை கடத்தல் குறித்த எச்சரிக்கை செய்திகளை மூன்று நபர்கள் பகிர்ந்துள்ளனர்.

“ஜடுகோடா பகுதிக்கு குழந்தை கடத்தல் கும்பல் நுழைந்துள்ளனர். காலை 8 மணிக்கு, துர்க்கு கிராம மக்கள் கடத்தல் கும்பலை பிடித்துள்ளனர். பின்பு, காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது (துர்க்கு, ஜடகோடா ஆகியவை ஜம்ஜெத்பூர் அருகில் உள்ள கிராமங்கள்).

“கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கையில் ஏடிஎம் கார்டு, சாக்குலேட்டுகள், பந்துகள், போதை பொருட்கள் வைத்துள்ளனர்.” என்று மற்றொரு செய்தி பரவியுள்ளது.

பொய் செய்திகளை பரப்பிய குப்தா, குமார் ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். பிறகு, பெயிலில் வெளிவந்த குப்தா, “செய்தி பகிரப்பட்ட வாட்ஸ் அப் குழுவில், காவல் துறை கண்காணிப்பாளர்,மற்ற அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். செய்தி பரப்பிய போது அவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்ற பதிவேட்டில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் 94 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 288 வழக்குகளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.