Read in English
This Article is From Nov 19, 2018

‘ராமரால் தான் இந்தியா ‘சூப்பர் பவர்’ தேசமாக விளங்குகிறது!’ உ.பி. அமைச்சரின் ‘குபீர்’ பேச்சு

‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் மட்டுமே அந்நகரின் புனித வரலாற்றை மீட்க முடியும். நாட்டு மக்களும் அதையே விரும்புகிறார்கள்

Advertisement
இந்தியா

அயோத்தியின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் எந்த வித கவனமும் செலுத்தப்படவில்லை, அமைச்சர்

Lucknow:

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் மட்டுமே அந்நகரின் புனித வரலாற்றை மீட்க முடியும். நாட்டு மக்களும் அதையே விரும்புகிறார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விரிவாகப் பேசிய அமைச்சர் லக்‌ஷ்மி நாராயண சவுத்ரி, ‘அரசு அல்லது எந்த ஒரு நிறுவனம் என்றாலும் பொது மக்களின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பெருவாரியான மக்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றே கூறுகின்றனர்.

கூடிய வரையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் தான் அயோத்தியின் வரலாற்று மாண்பு மீட்கப்படும். இதனால், ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்நகருக்கு வருகை தருவர். இதன் மூலம் இந்நகரத்தின் சுற்றுலா வருவாய் பெருகும்' என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் வளர்ச்சியை இந்த உலகமே கவனித்துக் கொண்டிருப்பதாகவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த நாடே கடவுள் ராமருக்குக் கடமைப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும், உலக மக்கள் அனைவரும் ராமரின் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் லக்‌ஷ்மண சவுத்ரி தெரிவித்துள்ளார்.

‘முகலாயர்கள் காலத்திலும் வெள்ளையர்கள் ஆட்சியிலும் அதன் பின்னரான சுதந்திர இந்தியாவிலும் பல ஆண்டுகளாக அயோத்தியின் வளர்ச்சி மேல் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர் தான் அயோத்தி அழகு பெற்று வருகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் அயோத்தியின் வளர்ச்சிக்காக யாரும் செயல்படவே இல்லை' என்று தெரிவித்துள்ளார் அந்த அமைச்சர்.

Advertisement
Advertisement