முக்கால்வாசி முதலையை விழுங்கிய பாம்பு
ஆஸ்திரேலியாவில் அனகோண்டா ஒன்று பெரிய முதலையை கடித்து விழுங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பிரபல புகைப்பட கலைஞர் மார்ட்டின் முல்லர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது கேமராக் கண்களில் இந்த காட்சி சிக்கியுள்ளது.
இந்த வகை அனகோண்டா ஆலிவ் வகையை சேர்ந்தது. இந்த படத்தில் காணப்படும் அனகோண்டா பாம்பு மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் காணப்படும் 2-வது மிகபெரிய அனகோண்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைத்தான் என்று அழைக்கப்படும் அனகோண்டா பாம்புகளின் வாய் ரப்பர் போன்று நெகிழுத் தண்மை கொண்டது. ஏனென்றால் இதற்கு மேல் மற்றும் கீழ்த்தாடைகள் தனியாக இருக்கும். இதன் மூலம் அவற்றை விட பெரிய விலங்குகளான மான்கள், முதலைகள் உள்ளிட்டவற்றையும், மனிதர்களையும் கொன்று விழுங்கி விடும்.
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட ஆலிவ் பைத்தான்கள் 13 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. இந்தோனேசியாவில் கடந்த 2017-ல் 23 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் வயிற்றில் இருந்து மனிதர் ஒருவரின் சடலம் கைப்பற்றப்பப்பட்டது.
Click for more
trending news