বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 20, 2019

இந்திரா காந்தி பிறந்த ஆனந்த் பவன் வீட்டிற்கு 4.35 கோடி வரி நிலுவைக்கான நோட்டீஸ்

செலுத்தப்படாத வரி தொடர்பாக மதிப்பிட்டோம் இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம். இதற்கு எந்தவொரு பதிலும் வராததால் வரி நிர்ணயம் இறுதி செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

குடியிருப்பு அல்லாத என்ற வகைப்படுத்தலின் கீழ் 2013ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை

Prayagraj :

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த வீட்டிற்கு ரூ. 4.35 கோடி சொத்து வரி செலுத்தாதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஆனந்த் பவனில் தான் முன்னாள் பிரதமர் இந்திர காந்தி பிறந்தார். தற்போது இந்த வீட்டினை சோனியா காந்தி தலைமையிலான ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை நடத்தி வருகிறது. 

குடியிருப்பு அல்லாத என்ற வகைப்படுத்தலின் கீழ் 2013ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை என்பதால் நகராட்சி நிர்வாக சட்டத்தின் கீழ் ஆனந்த் பவனுக்கு 4.35 கோடி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜ் நகராட்சி கமிஷ்னர் அலுவலகத்தின் தலைமை வரி மதிப்பீட்டு அதிகாரி பி.கே. மிஸ்தா தெரிவித்துள்ளார். 

செலுத்தப்படாத வரி தொடர்பாக மதிப்பிட்டோம் இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம். இதற்கு எந்தவொரு பதிலும் வராததால் வரி நிர்ணயம் இறுதி செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

இது தொடர்பாக முன்னால் மேயர் சவுத்ரி ஜிதேந்திரநாத் சிங் கூறுகையில் “ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளையானது அனைத்து விதமான வரிகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளதால் ஆனந்த் பவனுக்கு வரி விதிக்க முடியாது. இது ஒரு தவறான வரி விதிப்பு ஆகும். சுதந்திர போராட்டத்தின் நினைவுச்சின்னம், அருங்காட்சியகம் மற்றும் கல்வி மையம் என்று அவர் கூறினார். 

Advertisement