கைகள் இல்லாமல் பிறந்த வாசிலினா, தனது கால்களை பயன்படுத்தி சாப்பிடும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கடந்த சனிக்கிழமையன்று, தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த, வீடியோ தற்போது உலகெங்கிலும் உள்ள ஆயரக்கணக்கானவர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியுள்ளது.
அதில், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த வாசிலினா நுட்ஸன் என்ற ரஷ்ய சிறுமி, தனது கால்களைப் பயன்படுத்தி சாப்பிடக் கற்றுக்கொள்கிறார். 2 வயதேயான வாசிலினா, தான் உணவருந்த, கால்விரல்களுக்கு இடையில் ஒரு முட்கரண்டியை வைத்திருக்கிறார்.
இந்த வீடியோவை ட்வீட்டரில் பகிர்ந்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியதாவது, 'சமீபத்தில் என் பேரனைப் பார்த்தேன், அதனால்தான் இந்த வாட்ஸ்அப் பதிவைப் பார்த்தபோது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பயன்படுத்தி சவால்களை எதிர்கொள்வது மற்றும் வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, வாழ்க்கையில், குறைபாடுகள் மற்றும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அது ஒரு பரிசு; அதைப் பயன்படுத்த வேண்டியது நம்முடையது.
கீழே வீடியோ காண்க:
இது போன்ற படங்கள் எனது தளறாத நம்பிக்கையைத் தக்கவைக்க உதவுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் மகேந்திரா இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அது, 50,000க்கும் மேற்பட்ட 'லைக்குகள்' மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட 'ரீட்வீட்'களைப் பெற்றது. மேலும், கமெண்ட் பிரிவில், பலர் அந்த குழந்தையைப் புகழ்ந்து, சிரமங்களை எதிர்கொள்ளும் அவரது நம்பிக்கையைப் பாராட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக 10 டெய்லி அளித்துள்ள தகவலின்படி, சிறுமி வாசிலினா, மாஸ்கோவில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் கைவிடப்பட்டுள்ளார், 12 மாத குழந்தையாக இருந்த அவரை நுட்ஸன் என்பவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.