This Article is From Jan 07, 2020

''Pure Veg'' ரெஸ்டாரண்டில் உள்ள அசைவ உணவுகள் - இணையத்தை கலக்கும் மெனு போர்ட்

‘தூய சைவ உணவு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது அதில் ‘வெஜ் - ஃபிஷ் பிரை’ ,’வெஜ் மட்டன் தோசை’, ‘வெஜ் சிக்கன் பிரை’ என்ற உணவுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. 

''Pure Veg'' ரெஸ்டாரண்டில் உள்ள அசைவ உணவுகள் - இணையத்தை கலக்கும் மெனு போர்ட்

இந்த மெனு போர்டு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஒரு உணவகத்தின் மெனுவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ‘தூய சைவ உணவு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது அதில் ‘வெஜ் - ஃபிஷ் பிரை' ,'வெஜ் மட்டன் தோசை', ‘வெஜ் சிக்கன் பிரை' என்ற உணவுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. 

மகேந்திரா எழுதிய பதிவில் “இன்க்ரிடபில் இந்தியா எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பொருளின் மீதான நம்பிக்கை என்பது ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக அறிந்திருக்கிறோம். வெஜ்க்கும் நான்-வெஜ்க்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் நம்புவர்கள் மனதில் இருக்கிறது…” என்று எழுதியுள்ளார்.

இந்த மெனு போர்டு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஒரு ட்விட்டர் பயனர், “எனது ஜெயின் வாடிக்கையாளர்கள் உணவில் வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு மட்டும் உணவில் இருக்கக் கூடாது. மற்றபடி கோழி, முட்டை சாப்பிடுவதை பெரிதாக கருதுவதில்லை” என்று கூறியுள்ளார். 

“இது நம் மனதைப் பொறுத்தது.  நாம் எப்படி சிந்திக்கிறோம்” என்பதை பொறுத்தது என்று ஒருவர் கூறுகிறார். 

ஒரு ட்விட்டர் பயனர் “மலேசியாவில் இது மிகவும் பொதுவானது. அசல் அசைவ உணவுகள் போன்று தோற்றமளிக்கும் மற்றும் சுவைக்கும் டோஃபு உணவுகள் வழங்கப்படுவதுண்டு”

Click for more trending news


.