ஸ்விட் கடையின் படிகளில் அமர்ந்து கொண்டு சைகை மொழியில் வீடியோ போன் கால் பேசுவதைக் காணலாம்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் நவீன தொழில்நுட்பம் மாற்ற்றுத் திறன் கொண்டவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. வீடியோவில் வாய் பேசாமுடியாத மாற்றுத் திறனாளி சைகை மொழியின் மூலமாக பயன்படுத்துவதைக் காணலாம். வீடியோவில் ஸ்விட் கடையின் படிகளில் அமர்ந்து கொண்டு சைகை மொழியில் வீடியோ போன் கால் பேசுவதைக் காணலாம்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஊக்கமளிக்கும் மற்றும் வேடிக்கையான பதிவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்து வருகிறார். மொபைல் சாதனங்கள் பலருக்கும் தகவல் தொடர்ப்புக்கான புதிய வழிகளை எவ்வாறு திறந்து விட்டன என்பதை வீடியோ எடுத்துக்காட்டுகிறது.
“மொபைல் சாதனங்கள் நம் உலகத்தை கையகப்படுத்தி விட்டதாக அடிக்கடி விமர்சிக்கிறோம்” என்று ஆனந்த மஹிந்திரா எழுதியுள்ளார். “இந்த சாதனங்கள் நம்மில் பலருக்கும் புதிய தகவல் தொடர்பு புதிய உலகத்தை திறந்து விட்டன என்பதை நினைவூட்டுகிறது.”
ட்விட்டரில் அவரின் பதிவு 3,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகளை சேகரித்துள்ளது. பல ட்விட்டர் பயனர்கள் மஹிந்திராவின் கமெண்ட்டுடன் உடன்பட்டனர்.