கொல்கத்தா: ஐந்து முறை செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவில் நடக்கும் டாடா ஸ்டீல் செஸ் ராபிட் ப்ளிட்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளார்
நவம்பர் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ள இந்த செஸ் தொடரில், முக்கிய போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து பேசிய விஸ்வநாதன் ஆனந்த், 32 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் நடக்கும் முக்கிய செஸ் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்
“1986 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைப்பெற்ற கிராண்ட் மாஸ்டர் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அதனை தொடர்ந்து, இந்தாண்டு நடைப்பெறும் போட்டியில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்
டாடா செஸ் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 40,000 அமெரிக்க டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “இந்தியாவில் உள்ள செஸ் ஆர்வலர்களுக்கு இந்த தொடர் ஊக்கமளிப்பதாக இருக்கும். இந்த போட்டி தொடரை இந்திய மக்கள் பலரும் கண்டு களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என்றார்
போட்டி சுற்று தொடங்கும் முன், அனைத்து வீரர்களும் பங்கேற்பாளர் சுற்றுகளில் விளையாட உள்ளனர். இந்தியா சார்பில் ஹரி கிருஷ்ணா, சூர்யா சேகர் கங்குலி, விதித் குஜராத்தி, பிரகனாநந்தா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)