Read in English বাংলায় পড়ুন
This Article is From Apr 27, 2019

பாஜகவை ஆதரிக்கும் மகன் ஆனந்த் அம்பானி : காங்கிரஸை ஆதரிக்கும் அப்பா முகேஷ் அம்பானி

Elections 2019: அந்த பொதுக்கூட்டத்தின் முன் வரிசையில் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி உட்கார்ந்திருந்தார்.  “மோடியின் பேச்சைக் கேட்கவும் இந்திய தேசத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கவும் இங்கு வந்திருப்பதாக” மராத்தி மொழி செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • ஆனந்த் அம்பானி மோடியின் பிரசார கூட்டத்தில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்
  • மோடியின் பேச்சைக் கேட்கவும் தேசத்தை ஆதரிக்கவும் வந்துள்ளேன் - ஆனந்த்
  • சமீபத்தில் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசினார்
Mumbai:

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மும்பையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபாட்டார். அந்த பொதுக்கூட்டத்தின் முன் வரிசையில் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி உட்கார்ந்திருந்தார்.  “மோடியின் பேச்சைக் கேட்கவும் இந்திய தேசத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கவும் இங்கு வந்திருப்பதாக” மராத்தி மொழி செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளார்.

திங்களன்று தெற்கு மும்பையின் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மிலிந்த் தியோ போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முகேஷ் அம்பானி கருத்து தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்திற்கு சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாசாரம், சுற்றுப்புறத் தூய்மை குறித்து ஆழ்ந்த அறிவு உண்டு என்று முகேஷ் அம்பானி பேசிய வீடியோவை மிலிந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Advertisement

மற்றொருபுறம் ரபேல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனில் அம்பானி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

கடந்த மாதம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடனால் தத்தளித்து வந்தபோது அனில் அம்பானி கடனுதவி செய்து மீட்டுக் கொடுத்தார்.

Advertisement

2002 இல் திருபாய் அம்பானி இறப்புக்குப் பின் சகோதரர்கள் இருவரும் தொழில் மற்றும் சொத்துக்களை பிரித்து தங்கள் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அனில் அம்பானி கடனில் தப்பித்து வந்த நிலையில் முகேஷ் அம்பானி தன் தொழில் நிறுவனங்களை வெகுவாக முன்னேற்றி ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.

Disclaimer: NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal.

Advertisement