This Article is From Nov 24, 2019

“DMK-வின் அந்த மூவ்… நாங்கள் வரவேற்கிறோம்!”- Anbumani ராமதாஸின் ஓப்பன் டாக்!

Murasoli Issue - திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி, பாமக மீதும் பாஜக மீதும் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர உள்ளதாக எச்சரித்துள்ளார்

Advertisement
தமிழ்நாடு Written by

Murasoli Issue - அடுத்த ட்விஸ்டாக திமுக-வின் நடவடிக்கையை வரவேற்றுப் பேசியுள்ளார் பாமக-வின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ்.

திமுக-வின் அதிகாரபூர்வ நாளிதழான 'முரசொலி' (Murasoli), பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பாமக நிறுவனர், ராமதாஸ் (Ramadoss), பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையாமல் தகித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பாமக - பாஜக (PMK - BJP) தரப்பினர், ஆதிதிராவிடர்கள் ஆணையத்தில் புகார் கொடுத்தால், மறுபுறம் திமுக, பாமக மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கிறது. இதில் அடுத்த ட்விஸ்டாக திமுக-வின் நடவடிக்கையை வரவேற்றுப் பேசியுள்ளார் பாமக-வின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ்.

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே, ‘முரசொலி பஞ்சமி நிலத்தில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால், நீங்கள் விலகத் தயாரா..?,' என்று ராமதாஸுக்கு பதிலடி கொடுத்தார்.

அப்படி இருந்தும் விடாத பாஜக - பாமக தரப்பு, “வெறுமனே பேசிக் கொண்டே இருந்தால் போதாது. முரசொலி குறித்த ஆவணத்தை வெளியிட வேண்டும்,” என்று கோரிக்கை வைத்தன. இதைத் தொடர்ந்து முரசொலியின் பட்டா பத்திரத்தை திமுக தரப்பு வெளியிட்டது. அதற்குச் சமாதானம் ஆகாத ராமதாஸ், “பட்டா பத்திரத்தை வெளியிட்டு எந்தப் பயனும் இல்லை. மூலப் பத்திரத்தை வெளியிட வேண்டும்,” என்றார். அதற்கு சற்றுப் பின் வாங்கிய திமுக, “குற்றம் சாட்டியவர்கள்தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். முரசொலி பஞ்சமி நிலத்தில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்,” என்று பந்தை அந்தப் பக்கமே தள்ளிவிட்டது. 

‘இது மழுப்பல் காரணமாக தெரிகிறது,' என்ன எள்ளி நகையாடியது பாமக - பாஜக தரப்பு. தற்போது தமிழக அரசு, முரசொலி விவகாரத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கொடுக்கும் பதிலில் நீண்ட நாட்களாக ஊதிப் பெரிதாக்கி வரும் கதையின் க்ளைமாக்ஸ் தெரிந்துவிடும்.

Advertisement

இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி, பாமக மீதும் பாஜக மீதும் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர உள்ளதாக எச்சரித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அன்புமணி ராமதாஸ், “திமுக-வின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். காரணம், அவதூறு வழக்கை நீதிமன்றத்தில்தான் தொடுக்க வேண்டும். அப்படி நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடர்ந்தால், முரசொலி குறித்தான உண்மையான பத்திரம் வெளியே வரும். எனவே, திமுக-வின் நடவடிக்கையை நாங்கள் முழு மனதோடு வரவேற்கின்றோம்,” என்று தடாலடியாக பேசியுள்ளார். 

Advertisement