This Article is From Apr 09, 2019

’10 நாள் உட்காரக் கூடாது… நிக்கணும்?’- மேடையில் அதிமுக வேட்பாளரை மிரட்டிய அன்புமணி

ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது பாமக.

’10 நாள் உட்காரக் கூடாது… நிக்கணும்?’- மேடையில் அதிமுக வேட்பாளரை மிரட்டிய அன்புமணி

அன்புமணியின் இந்தப் பேச்சு, மேடையிலிருந்த அதிமுக-வினரை முகம் சுளிக்க வைத்தது

அதிமுக ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை, பிரசாரக் கூட்ட மேடையிலேயே மிரட்டும் வகையில் பேசியுள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். 

ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது பாமக. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்தக் கூட்டணி போட்டியிடுகின்றது. 20 தொகுதியில் அதிமுக-வும், 7 தொகுதிகளில் பாமக-வும், 5 இடங்களில் பாஜக-வும், 4 இடங்களில் தேமுதிக-வும், தஞ்சாவூரில் தமாக-வும், தென்காசியில் புதிய தமிழகம் கட்சியும், வேலூரில் புதிய நீதிக் கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

7crsj41

கூட்டணியின் முக்கிய கட்சியான பாமக, அதிமுக-வுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றது. குறிப்பாக அந்தக் கட்சியின் அன்புமணி, அதிமுக-வுக்குத் தொடர்ந்து சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

0tkjluco

அப்படி ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்துப் பிரசாரம் செய்து வந்தார் அன்புமணி. பொதுக் கூட்ட மேடையில் அன்புமணி, முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்க, ஏழுமலை அவருக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த அன்புமணி, ‘எங்கப்பா வேட்பாளரு. உட்கார்ந்திருக்காரு… நாங்களெல்லாம் வெயில்ல நின்னுகிட்டு இருக்கோம். மக்களெல்லாம் வெயில்ல நின்னுகிட்டு இருக்காங்க. ஆனா, அவரு மட்டும் உட்கார்ந்திருக்காரு. இன்னும் 10 நாளைக்கு உட்காரக் கூடாது. நிக்கணும்' என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

qhdpua4g

அன்புமணியின் இந்தப் பேச்சு, மேடையிலிருந்த அதிமுக-வினரை முகம் சுளிக்க வைத்தது. இதற்கு முன்னரும் அன்புமணி தர்மபுரியில் பிரசாரம் செய்தபோது, அதிமுக தொண்டர் ஒருவர், ‘ஐயா, எம்.பி ஆனதற்கு அப்புறம் ஏன் இந்தப் பக்கமே வரலை' என்று கேட்டார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள், கேள்வியெழுப்பியவரை கடுமையாக தாக்கினர். அந்தப் பிரச்னை ஓய்வதற்குள் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அன்புமணி.

.