This Article is From Apr 06, 2019

வாக்குச்சாவடி குறித்த அன்புமணி சர்ச்சை பேச்சு: வழக்கு பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு!

வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது குறித்த பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அன்புமணி மீது வழக்குபதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Written by

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து, தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது. இதில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் பேசும் போது, 

இந்த தேர்தலில் என்ன நடக்கும் தெரியுமா? பூத்தில் யார் இருப்பா? நம்மதான் இருப்போம்.. சொல்றது புரியுதா..இல்லையா?... யார் வெற்றி பெறப்போறாங்கன்னு சொல்லனுமா வெளியில், என்று அன்புமணி பேசினார். அன்புமணியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement