বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 24, 2019

நகைச்சுவை வனவிலங்கு விருதுகள் 2019 வெற்றியாளர்கள் யார்....?

"Grab life by the ..." என்ற தலைப்பில், புகைப்படத்தை Botswana-வில் Sarah Skinner கிளிக் செய்தார்

Advertisement
விசித்திரம் Edited by

நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளராக Sarah Skinner-ன் புகைப்படம் "Grab life by the ..." என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது

ஒரு சிங்கம் குட்டியின் மோசமான நேர புகைப்படம் ( awkwardly-timed photograph) இந்த ஆண்டின் வேடிக்கையான விலங்கு புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. "Grab life by the..." என்ற தலைப்பில், புகைப்படத்தை போட்ஸ்வானாவில் (Botswana) சாரா ஸ்கின்னர் (Sarah Skinner) கிளிக் செய்தார். இது நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் 2019-ன் (Comedy Wildlife Photography Awards 2019) ஒட்டுமொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comedy Wildlife Photography Awards-கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, "இந்த படம் உலகம் முழுவதும் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் பரப்பும், என்பதை அறிந்து கொள்வது நிச்சயமாக என் இதயத்தை வெப்பப்படுத்துகிறது" என்று திருமதி ஸ்கின்னர் (Skinner) கூறினார். சிங்க குட்டி தொடர்ந்து "பெருமையில் செழித்து வளர்கிறது" என்றும் அவர் கூறினார்.

கீழே உள்ள பெருங்களிப்புடைய புகைப்படத்தைப் (hilarious photograph) பாருங்கள்:

நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து 4,000-திற்கும் மேற்பட்ட உள்ளீடுகளைப் பெற்றன. இவர்களிடமிருந்து 40 இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு குழந்தை சிம்ப் முழு ஸ்வாக், ஒரு சோகமான பழுப்பு நிற கரடி மற்றும் சண்டையிடும் பறவைகள் ஆகியவை அடங்கும். இவர்களிடமிருந்து, நவம்பர் 13, புதன்கிழமை நடுவர்கள் வெவ்வேறு பிரிவுகளின் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

Advertisement

விளாடோ பிர்சாவின் (Vlado Pirsa's) "குடும்ப கருத்து வேறுபாடு" (Family disagreement) - குரோஷியாவில் (Croatia) வண்ணமயமான பறவைகளின் படம் - 'கிரியேச்சர்ஸ் இன் தி ஏர்' (Creatures In The Air) பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

'ஒலிம்பஸ் கிரியேச்சர்ஸ் அண்டர் தி வாட்டர் விருது' (Olympus Creatures Under The Water Award') ஹாரி வாக்கரின் (Harry Walker's) படம் "Oh my" என்ற தலைப்பில் வென்றது. இது 'பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதையும்' (People's Choice Award) வென்றது.

எலைன் க்ரூரின் (Elaine Kruer's) தொடர் "First Comes Love..then comes Marriage" என்ற தலைப்பில் 'Amazing Internet Portfolio Award' கிடைத்தது.

நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் 2019-ல் அங்கீகரிக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களைப் பாருங்கள்.

நகைச்சுவை வனவிலங்கு புகைப்படம் விருதுகள் 2015-ஆம் ஆண்டில் "போட்டியின் மூலம் பாதுகாப்பு" (conservation through competition) அடைவதை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டன. அதே நேரத்தில் "இலகுவான, உற்சாகமான" புகைப்படம் எடுத்தல் போட்டியை ஏற்பாடு செய்தன.

இந்த புகைப்படங்களில் உங்களுக்கு பிடித்தது எது? கருத்துகள் பகுதியைப் (comments section) பயன்படுத்தி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Advertisement
Advertisement