This Article is From Sep 16, 2019

Andhra Boat Capsize: சுற்றுலா படகு மூழ்கியதில் 12 பேர் பலி ; தேடுதல் பணி தீவிரம்

Andhra Pradesh boat tragedy: படகில் வந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சுற்றுலா பயணிகளில் 22 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 14 பேர் வாரங்கல்லைச் சேர்ந்தவர்களும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Andhra Boat Capsize:  சுற்றுலா படகு மூழ்கியதில் 12 பேர் பலி ; தேடுதல் பணி தீவிரம்

ற்றுலா படகு மூழ்கியதில் 30 பேரைக் காணவில்லை

Hyderabad:

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 73 பேரைக் கொண்ட படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கண்டு பிடிப்பதற்காக இன்று அதிகாலை மீட்பு நடவடிக்கை தொடங்கியது. அமராவதியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள கச்சுலுரு கிராமத்திற்கு அருகே சுற்றுலா படகு மூழ்கியதில் 30 பேரைக் காணவில்லை. நேற்று மாலை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. 

இந்திய கடற்படையிலிருந்து ஆழமான பகுதிகளில் நீந்துகிற வீரர்களுடன் இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் எட்டு படகுகள் இன்று அதிகாலை 5.45 மணிக்கு தேடுதல் பணி தொடங்கியது. தேசிய பேரிடர் குழுவும் உதவிக்கு வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த “சைட் ஸ்கேன் சோனார்” கருவிகளைக் கொண்ட சிறப்பான டைவர் குழு தேடல் பணியில் பிற்பகுதியில் இணைய உள்ளது. 

“ராயல் வசிஷ்டா” என்ற சுற்றுலா படகு தேவி பட்டினம் அருகிலுள்ள காந்தி போச்சம்மா கோயிலிருந்து ஒரு பிரதான சுற்றுலா தளமான பாபி கொண்டலு மலைத்தொடருக்கு பயணத்தை தொடங்கியது.  கச்சலூரு கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகில் லைஃப் ஜாக்கெட்டுகள் இருந்தும் பயணிகள் அவற்றை அணியவில்லை. படகை ஓட்டிய ஓட்டுநர் வெளியூர் என்பதால் ஆற்றில் ஆபத்துகள் குறித்து ஏதும் தெரிந்திருக்கவில்லை. படகில் இருந்த மற்ற ஊழியர்களுக்கும் அவசரநிலையை கையாளத் தெரியவில்லை. 

முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இப்பகுதியில் வான்வழியே ஆய்வை மேற்கொண்டார். காயமடைந்தவரக்ளை மருத்துவமனையில் சந்தித்தார். பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் என அரசு அறிவித்துள்ளது. படகில் வந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சுற்றுலா பயணிகளில் 22 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 14 பேர் வாரங்கல்லைச் சேர்ந்தவர்களும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் எந்தவொரு படகுகளையும் அனுமதிக்க கூடாது என்று  அறிவுறுத்தல்களை வழங்க அரசு தவறிவிட்டதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவண் கல்யாண் குற்றம் சாட்டினார்.

லைஃப் ஜாக்கெட்டுகள் கிடைத்தும் பலர் சூடாக இருப்பதாக கூறி அவற்றை கழற்றிவிட்டதாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர். லைஃப் ஜாக்கெட் அணிந்த மக்களை தங்களால் காப்பாற்ற முடிந்ததாக மீட்பு குழு தெரிவித்துள்ளது. 

திருப்பதியைச் சேர்ந்த பெண் தனது கணவர் லைஃப் ஜாக்கெட்டை தனக்கு கொடுத்ததாகவும் தன்னுடைய கணவரும் 12 வயது மகளையும் காணவில்லை என்று கூறுகிறார். “அவர்கள் இருவரும் இல்லாமல் என் வாழ்வின் பயன் என்ன?” என்று கூறி அழுதார்.  படகு குறைந்தது 300 அடி ஆழத்தில் மூழ்கியிருக்கலாம் என்றும் சிலரின் உடல்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

.