This Article is From Sep 16, 2019

’உலகின் வயதான பெற்றோர்!’- 74 வயதில் இட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதி!

4 பேர் கொண்ட ஒரு மருத்துவர்கள் குழுவின் காண்காணிப்பின் கீழ் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், மங்கையம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன

பிறந்த குழந்தைகளும் தேவையற்ற நோய் தொற்றை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்கா ஐசியூ பிரிவில்தான் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர் மருத்துவர்கள். 

Hyderabad:

ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த செய்தி சில நாட்களுக்கு முன்னர் வைரலானது. ‘உலகின் வயதான பெற்றோர்' என்ற பெயரை வாங்கிய அந்த தம்பதிகள், குழந்தைகளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

ஐ.வி.எப் (IVF) முறையில் கருத்தரித்த மங்கையம்மாவுக்கு குண்டூரில் உள்ள அஹல்யா நர்சரி மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 

4 பேர் கொண்ட ஒரு மருத்துவர்கள் குழுவின் காண்காணிப்பின் கீழ் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், மங்கையம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பிரசவம் ஆனதைத் தொடர்ந்து 74 வயதாகும் மங்கையம்மா மற்றும் 80 வயதாகும் அவரது கணவர் ராஜா ராவ் ஆகியோர் மருத்துவமனையின் இன்டென்சிவ் கேர் பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர். இரட்டைக் குழந்தைகள் பிறந்ததைத் தொடர்ந்து, ராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்தன. அதை மருத்துவமனைத் தரப்பு மறுத்துள்ளது. மங்கையம்மாவுக்கு தொற்று எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் தொடர்ந்து ஐசியூ பிரிவில் இருந்தார். 

பிறந்த குழந்தைகளும் தேவையற்ற நோய் தொற்றை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்கா ஐசியூ பிரிவில்தான் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர் மருத்துவர்கள். 

மங்கையம்மாவும், ராவும் பல ஆண்டுகள் குழந்தைப் பெற்றுக் கொள்ள முயன்றுள்ளனர். அதைத் தொடர்ந்துதான் இந்த ஆண்டு ஜனவரி மாத்ததில் மங்கையம்மாவுக்கு ஐ.வி.எஃப் முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது. பிரசமவம் ஆனதையடுத்து, மங்கையம்மாவின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஐ.வி.எஃப் முறையில் பிரசவம் செய்துகொள்ள மங்கையம்மா வந்தபோது, அவரது வயதை சொன்னாரா என்ற கேள்விக்கு மருத்துவமனை தரப்பு, “முதியவர்களுக்கு முறையான பிறந்த சான்றிதழ் இருப்பது அரிதானது. எனவே, அவர்களின் சரியான வயது அவர்களுக்கேத் தெரியாது” என்றது. 


 


 

.