பட்னாலா பசந்த்குமார் 2012ல் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Visakhapatnam: ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்த முடிவு செய்துள்ளார்.
தற்போது பசந்த்குமார் விசாகப்பட்டினம் மண்டல மேம்பாட்டு ஆணையத்தில் ஆணையராக இருக்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஆடம்பர செலவு செய்வதை தவிர்க்க முடிவு செய்த பசந்த்குமார் மிக மிக எளிமையாக மகள் திருமணத்தை நடத்தினார்.
அந்த திருமணத்திற்கு அவர் செலவிட்ட மொத்த தொகையே ரூ.16 ஆயிரம் தான்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். வருகிற 10-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தையும் மிக மிக எளிதாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
திருமண அழைப்பிதழ், உடை மற்றும் விருந்தாளிக்கு உணவு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவிட அவர் ஏற்பாடு செய்துள்ளார்.