Hyderabad: ஹைதரபாத்: மனைவி உடன் ஏற்பட்ட பிரச்சனையால், தனது மூன்று மகன்களை ஆற்றில் வீசிய நபரால் ஆந்திராவில் பரப்பரபு ஏற்பட்டுள்ளது
ஆந்திர பிரதேசம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்டேஷ் என்பவர், தனது மனைவி அமராவதி, மகன்கள் புனித், சஞ்சய், ராகுல் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
தொடர்ந்து கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த அமரவாதி, மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஒரு வாரத்திற்கு பிறகு, மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வெங்கடேஷ் சென்றுள்ளார். அமராவதியும், குழந்தைகளும் வெங்கடேஷுடன் சென்றுள்ளனர். நேற்று வீடு திரும்பும் வழியில், கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வெங்கடேஷ், மூன்று குழந்தைகளையும், ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேஷ், மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தால், சித்தூர் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.