நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14.35 லட்சமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், தற்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தலா ஒரு லட்சத்தினை கடந்துள்ளது.
இரு மாநிலத்திலும் ஏறத்தாழ தலா 5,000 புதிய நோயாளிகள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்றை நிலவரப்படி கர்நாடகாவில் 5,324 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 1,01,465 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரூவில் புதியதாக 1,470பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெங்களூரூவின் மொத்த பாதிப்பு 46,943 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று புதியதாக 7,627 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 96,298லிருந்து 1,02,349 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.