Read in English
This Article is From Dec 09, 2019

12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சிறுமியை குடும்பத்துடன் சேர்த்து வைத்த Facebook!!

சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் வம்சி கிருஷ்ணா என்பவர் Facebook-ல் சிறுமியின் பெற்றோர், சகோதரர்களை தேடிப்பார்த்தார். இதில், சிறுமியின் குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

Advertisement
இந்தியா Edited by

பேஸ்புக்கில் அளித்த மெசேஜுக்கு சிறுமியின் சகோதரர் பதில் அளித்திருக்கிறார். இது குடும்பம் ஒன்றிணைய காரணமாக அமைந்து விட்டது.

Vijaywada:

12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சிறுமியை சமூக வலைதளமான பேஸ்புக் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது. இந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பவானி என்பவர் 4 வயதாக இருக்கும்போது காணாமல் போய் விட்டார். இதன்பின்னர் அவருக்கும், குடும்பத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

சிறுமி பவானியை பெண் ஒருவர் தத்தெடுத்து விஜயவாடாவில் வளர்த்து வந்தார். 

இந்த நிலையில் வம்சி கிருஷ்ணா என்பவரது வீட்டிற்கு பவானி வீட்டு வேலைகளுக்காக சேர்ந்துள்ளார். அவரிடம் குடும்ப பின்னணி குறித்து வம்சி விசாரித்திருக்கிறார். பவானியும் அதுதொடர்பான தகவல்களை தந்திருக்கிறார்.

Advertisement

இதன்பின்னர் குடும்பத்தை பார்க்க விருப்பமா, பார்த்தால் குடும்பத்துடன் சேர்ந்து கொள்வாயா என்று வம்சி கேட்க, அதற்கு பவானியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பவானி அளித்த விவரங்களின் அடிப்படையில் அவரது குடும்பத்தினரை வம்சி பேஸ்புக்கில் தேடினார். இதில் அவரது சகோதரர் கிடைத்திருக்கிறார். பின்னர் தனது குடும்பத்தினருடன் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சேர்ந்துள்ளார் சிறுமி பவானி. 

Advertisement

இதுகுறித்து வம்சி கிருஷ்ணா கூறுகையில், 'நான் பணிக்கு அமர்த்துவோரின் ஆவணங்களை வழக்கமாக சரிபார்ப்பேன். எனவே அந்த சிறுமியிடம் ஆவணங்கள் மற்றும் வயதை விசாரித்தேன். அவள் தன்னிடம் எந்த ஆவணமும் இல்லை என்று தெரிவித்தார். அவரை ஒரு பெண் தத்தெடுத்திருக்கிறார். தொடர்ந்து அவளிடம் கேட்டபோது, தன்னுடைய உண்மையான பெற்றோருடன் சேர விரும்புவதாக கூறினார். 

இதையடுத்து பவானி தந்த தகவல்களின் அடிப்படையில் பேஸ்புக்கில் அவரது குடும்பத்தினரை தேடிப்பார்த்தேன். ஒருவருக்கு பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பினேன். அவர் அளித்த பதிலும், பவானி சொன்னதும் ஒத்துப் போயின. இதையடுத்து வீடியோ கால் செய்து பேசினோம். இதில்  பவானியின் குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் பவானி ஒப்படைக்கப்பட்டார். தற்போது குடும்பத்தினருடன் பவானி மகிழ்ச்சியாக உள்ளார்.' என்று தெரிவித்தார். 
 

Advertisement