This Article is From Mar 04, 2020

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்து சம்பவமானது அதிகாலை 4 மணி அளவில் ஜகநாதபுரம் பாலத்திற்கு அருகே நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

Andhra Pradesh: பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பாலக்கொல்லு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • அதிகாலை 4 மணி அளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
  • காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலே உயரிழப்பு
  • உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டுள்ளன
West Godavari:

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று கால்வியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்துச்சம்பவமானது அதிகாலை 4 மணி அளவில் ஜகநாதபுரம் பாலத்திற்கு அருகே நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், உயிரிழந்தவர்கள் சுரேஷ் (22), செட்டியா (45), காசி (22) உள்ளிட்டோர் என்பது கண்டறிப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து அந்த பகுதி வட்ட ஆய்வாளர் வெங்கடேஷ்வரா ராவ் கூறும்போது, இன்று அதிகாலை 4 மணி அளவில் AP37 AW 5777 என்ற பதிவு எண் கொண்ட கார் ஒன்று காக்கிநாடாவில் இருந்து பாலக்கொல்லு நோக்கி சென்ற போது, ஜகநாதபுரம் அருகே கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், காரில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலே உயரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். 

தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பாலக்கொல்லு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.