8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்
பிபிசி குழுவினர் அனிமல் பார்க் என்ற தொடருக்காக இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஸிர் என்னுமிடத்தில் படப்பிடிப்பு நடத்தினர். அப்போது லாங்லீட் எஸ்டேட் மற்றும் சபாரி பூங்காவில் ஆப்பிரிக்க செம்மறி ஆட்டினை அறிமுகப்படுத்துகிறார். கேமரூன் செம்மறி ஆடுகள் உலகின் மிக அரிதான ஆடுகளில் ஒன்றாகும் .
அந்த ஆட்டினை பாதுகாத்து வளர்த்து வரும் பெண் ஆட்டை குறித்து விளக்குகிறார். பின் கேமரா மேனை நோக்கி ஓடுகிறது ஆடு. மண்டியிட்ட படி ஆட்டினை படம் பிடிக்கும் கேமராமேனை ஏடாகூடமாக முட்டி கீழே தள்ளுகிறது ஆடு.
ஆட்டினை பாதுகாப்பவரோ சிசில் அப்படி செய்யாதே என்று கூறி என்னை மன்னித்து விடுங்கள் என்று சிரித்து விடுகிறார். யூட்யூப்பில் ஏற்றப்பட்டதும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். பலர் பகிர்ந்தும் உள்ளனர்.
பலரும் “ இந்த காணொளி என்னை கடுமையாக சிரிக்க வைக்கிறது. கேமராமேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கமெண்ட் செய்துள்ளனர்.
பலரும் கேமராமேன் விழுவதற்கு முன் கேமராவை பாதுகாப்பாக வைத்ததற்காக பாராட்டியுள்ளனர்.
பிபிசி கேமராமேனுக்கு இந்த சம்பவத்திற்கு பிறகு ஆடுகளின் வலிமை பற்றி தெரிந்திருக்கும்.
Click for more
trending news