This Article is From Nov 02, 2018

விடுப்பு தர மறுத்த உயர் அதிகாரிகள் மீது பயிற்சி காவலர்கள் துப்பாக்கிச்சூடு!

மருத்துவ விடுப்பு தர மறுத்ததால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் உயிரிழந்ததாக பயிற்சி காவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விடுப்பு தர மறுத்த உயர் அதிகாரிகள் மீது பயிற்சி காவலர்கள் துப்பாக்கிச்சூடு!

கலகத்தை ஏற்படுத்திய காவலர்கள் கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்புதான் காவலர் பயிற்சியை தொடங்கினார்கள்

Patna:

பீகாரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவலருக்கு விடுப்பு தர மறுத்த உயர் அதிகாரிகளை பயிற்சி காவலர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் அதிகாரிகளின் வாகனங்களை சேதபடுத்தியுள்ளார்.

நிலையை கட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் மனு மகாராஜை இளைநிலை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். எஸ்.டி.எஃப், ஏ.டி.எஸ் மற்றும் பீகார் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மூத்த காவல் அதிகாரி கூறுகையில், காவலர் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை மருத்துவமனையில் பெற்று வந்ததாகவும், அவருக்கு விடுமுறை மறுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஒருமணி நேர குழப்பத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக டி.ஐ.ஜி ராஜேஷ் குமார் கூறினார்.

பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் இச்சம்பவம் குறித்த தெளிவான அறிக்கையை காவல் இயக்குனர் கே.எஸ் திரிவேதி மூலம் கேட்டு அறிந்தார். காவலர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் காவலர் பயிற்சியை தொடங்கினார்கள். மேலும் அவர்கள் காவலர் வேலை மற்றும் ஒழுக்கம் குறித்து ஒரு தெளிவு நிலைக்கு வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி தெரிவித்தார்.

.