This Article is From Jul 13, 2018

அம்மா உணவகங்களைப் போல ஆந்திராவில் ஹிட்டடித்த 'அண்ணா கேண்டீன்'!

காலை, மதிய, இரவு உணவுகள் 5 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் வழிசெய்யப்பட்டள்ளது

Advertisement
தெற்கு Posted by

விஜயவாடா: தமிழகத்தில் அம்மா உணவகங்களைப் போல, ஆந்திராவில் ஆரம்பிக்கப்பட்ட ‘அண்ணா கேண்டீன்’ திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழகம் வந்திருந்தபோது இங்கு செயல்பட்டு வந்த அம்மா உணவகங்களை நேரில் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, இந்த திட்டத்தை ஆந்திராவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். இதனையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிய என்.டி.ஆர் நினைவாக, ஆந்திராவில் பல்வேறு நகரங்களில் நேற்று முன் தினம் 60 இடங்களிலும், நேற்று 40 இடங்களிலும் ‘ அண்ணா கேண்டீன்’ தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் தற்போது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு காலை, மதிய, இரவு உணவுகள் 5 ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் வழிசெய்யப்பட்டள்ளது.

Advertisement

இதுகுறித்து அண்ணா கேண்டீன் காசாளர் ஒருவர் கூறுகையில், மக்கள் இந்த திட்டத்திற்கு பெரிதும் ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்கு சாப்பிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மேலும் 100 இடங்களில் கேண்டீன்களைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாட்கள் இந்த கேண்டீன்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த உணவகங்களுக்கு உணவுகளை அக்‌ஷய பாத்திரா என்கிற தொண்டு நிறுவனம் விநியோகிக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், நாங்கள் சிறப்பாகவும், சுத்தமான முறையிலும் உணவுகளை தயாரித்து வழங்குகிறோம். இதற்கு அரசின் ஆதரவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement