This Article is From Feb 05, 2019

கோரிக்கைள் ஏற்பு! - உண்ணாவிரதத்தை கைவிட்டார் அண்ணா ஹசாரே!

தனது உண்ணாவிரதத்தை முடித்த அண்ணா ஹசாரே, தனது கிராமத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தனது முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளதாகவும், பிப்.13 தேதி லோக்பால் நியமனத்தை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்

7 நாட்களாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார் அன்னா ஹசாரே.

Mumbai:

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 7 நாட்களா உண்ணாவிரதம் இருந்த வந்த அன்னா ஹசாரே, தனது கோரிக்கையை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றதால் இன்று தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் கடந்த 30-ந்தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போதும், 2014 தேர்தலில் வெற்றி பெற பாஜக என்னை பயன்படுத்திக் கொண்டது. லோக்பாலுக்கான எனது போராட்டம் மூலம்தான் பாஜகவும், ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடித்தன. இப்போது இவர்கள் இருவர் மீதும் எனக்கு சிறிதளவு கூட மரியாதை இல்லை.

பிரதமர் மோடியின் அரசு மக்களை தவறாக வழி நடத்துகிறது. மராட்டிய மாநில அரசும் கடந்த 4 ஆண்டுகளாகவே பொய்களை கூறி வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொய்களை கூற முடியும். இந்த அரசு நாட்டு மக்களை கைவிட்டுவிட்டது. 2011 மற்றும் 2014-ல் என்னுடைய போராட்டங்களினால் பயன் அடைந்தவர்கள் இன்று எனது கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

.