This Article is From Nov 15, 2018

அறிவாலயத்தில் அருகருகே அமைய உள்ள அண்ணா, கலைஞர் சிலைகள்: டிச.16ல் திறப்பு விழா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் அருகருகே அமைய உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவாலயத்தில் அருகருகே அமைய உள்ள அண்ணா, கலைஞர் சிலைகள்: டிச.16ல் திறப்பு விழா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை வரும் டிசம்பர் 16ஆம் தேதி கலைஞர் சிலை திறக்கப்பட உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி இருக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில், கலைஞர் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் அருகருகே அமைய உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை திறந்து வைக்க அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.