This Article is From Dec 21, 2019

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது : தேர்வு நடக்கும் நாள் இதுதான்

Anna University news: தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது : தேர்வு நடக்கும் நாள் இதுதான்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

Anna University news: தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழத்தின் தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன

27 மாவட்டங்களில் திருவிழாக்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் காரணமாக பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு 2019 டிசம்பர் 21 முதல் 2020 ஜனவரி 1வரை விடுமுறை அறிவிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையில் உயர்கல்வி செயலாளர் மங்கத் ராம் சர்மா, கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாற்றியமைக்கப்பட்ட தேர்வுகளின் விவரம்:

Anna University, Anna University exam postponed, Anna University news, Anna University exam postponed 2019

தொழில்நுட்ப கல்வி மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரகங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 

தொடர் விடுமுறையையொட்டி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 21,23,24,26, 27,28,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர்களுக்கு அறிக்கையை பல்கலைக்கழகம் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் தேர்வுகள் ஜனவரி முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் நடைபெறும்.


 

.